வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU) வலியுறுத்தியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிணற்று நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு PHIU செயலாளர் சமில் முத்துக்குடா குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
வயிற்றுப்போக்கு போன்ற நீரினால் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் என்பதால், கொதிக்க வைத்த தண்ணீரைக் குடிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
சிறுவர்களுக்கு கொதித்து ஆறிய நீரை மாத்திரம் அருந்துவதற்கு வழங்க வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
மேலதிகமாக, தற்போதைய பேரிடர் சூழ்நிலை வீடுகளைச் சுற்றி நுளம்புகள் பெருகும் இடங்களை உருவாக்கக்கூடும்.
எனவே, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க, தங்கள் வீடுகளை சுத்தம் செய்யும் போது, இந்த இனப்பெருக்க இடங்களை அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.












