05 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரை உள்ளடக்கிய இந்திய சுற்றுப்பயணத்திற்கான 15 பேர் கொண்ட மகளிர் அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது.
தொடருக்காக இலங்கை மகளிர் அணி நாளை (17) இந்தியாவுக்கு புறப்பட உள்ளது என்று SLC வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகள் 2025 டிசம்பர் 21, 23, 26, 28 மற்றும் 30 ஆகிய திகதிகளில் நடைபெறும்.


















