நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்துக்கான சான்றிதழ் நிறுத்தப்பட்டதுக்கு எதிராக இந்திய உயர் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வ மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
படத்திற்கு UA சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு (CBFC) உத்தரவிட்ட முந்தைய தனி நீதிபதி உத்தரவை நிறுத்தி வைக்கும் சென்னை மேல் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து இந்த மனு இன்று (12) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது திரைப்படத்தின் வெளியீட்டைச் சுற்றி மற்றொரு நிச்சயமற்ற தன்மையை சேர்க்கிறது.
விஜய்யின் இறுதிப்படமாக கூறப்படும் ஜனநாயகன் முதலில் ஜனவரி 9 ஆம் திகதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது.
மேலும் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவருக்கு அரசியல் ரீதியாக முக்கியமான தருணத்தில் இந்தப்படம் வெளிவரவுள்ளது.
2025 செப்டெம்பர் மாத கரூர் கூட்ட நெரிசில் விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக விஜய் மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) முன் ஆஜராக டெல்லி வந்த அதே நாளில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில், சென்னை மேல் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை எதிர்த்து தலையிடக் கோரப்பட்டுள்ளது.
இந்த தடை தற்போது திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டிற்குத் தேவையான UA சான்றிதழை CBFC வழங்குவதைத் தடுக்கிறது.














