இலங்கை தொடர்பாக ஆராய ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் சட்ட ஆலோசகர்களையும் புலனாய்வாளர்களையும் நியமிக்கவுள்ளது
இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம், இலங்கையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் பணியைத் தொடங்கும் என்றும் அதன்படி, இலங்கையில் பணிபுரிய 12 புதிய ஊழியர்களை நியமிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அவர்களில் சர்வதேச குற்றவியல் நீதி – குற்றவியல் விசாரணைகள் மற்றும் அணியை ஒருங்கிணைத்து ஒரு தகவல் மற்றும் சான்றுகள் சேகரிக்கும் உத்தியுடைய ஆய்வாளர்கள், இரண்டு புலனாய்வாளர்கள், மனித உரிமை அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பின் ஆதரவு அதிகாரிகள் ஆகியோரை மேற்பார்வையிடுவதற்கான அனுபவமுள்ள சட்ட ஆலோசகர்கள் உள்ளனர்.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் முன்னேற்றம் உட்பட இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை குறித்த அதன் கண்காணிப்பு மற்றும் அறிக்கையை மேம்படுத்த உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.