மலையகத்தில் கல்வி வளரச்சிக்கு வறுமைதான் முக்கிய தடையாக இருக்கின்றது என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியுள்ளதாவது, “இ.தொ.கா. என்பது ஒரு குடும்பமாகும்
அதன் ஒற்றுமை சமூகத்தின் ஒற்றுமையாகும். ஊதிய உரிமைக்கான போராட்டத்தில் அது அனைவருக்கும் புரிந்திருக்கும்.
அந்தவகையில் காங்கிரஸுல் அங்கம் வகிக்கின்றவர்களின் பொருளாதார பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்பதே எங்களது எதிர்ப்பார்ப்பாகும்.
மேலும் மலையகத்திலுள்ள இளைய சமூகத்தினர் மற்றும் பிள்ளைகள் கற்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.
ஆனாலும் கல்வி ஊடாக முன்னேறி செல்வதற்கு வறுமைதான் அவர்களுக்கு தடையாக இருக்கின்றது.
அதனை தகர்த்துவதற்கே புலமைப்பரிசில் திட்டங்களை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.