சர்வதேச சமூகம் இலங்கை மீதான தன்னுடைய அழுத்தங்களை கூடுதலாக பிரயோகித்து ஒரு நீதியான ஒரு நிம்மதியான வாழ்வை தமிழ் மக்களிற்கு ஏற்படடுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்னிர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற டகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”அண்மைய இரண்டு மூன்று நாட்களிற்கு முன்னர் பாதுகாப்பு செயலாளரால் ஒரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது. ஏழு புலம்பெயர் அமைப்புக்களிற்கு தடையும், கிட்டத்த்ட்ட 353 தமிழ் முஸ்லிம் தனிநபர்களிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆபத்தான விடயம்.
ஏற்கனவே இவ்வாறான தடை கொண்டு வரப்பட்டது. இந்த தடைகள் ரணில் மற்றும் சிறிசேன அரசின் காலத்தில் நீக்கப்பட்டு சுமுகமான சூழல் ஏற்படுத்தப்பட்டது.
அந்த அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் பேச்சுவார்த்தைகள், மனித உரிமை விடயங்களை கையாளுதல், மனித உரிமைகளிற்கான தீர்வை எட்டுதல், காணாமல் புானோர் அலுவலகம் அமைத்தல் என்றவாறான சில படிமுறைகள் அமைக்கப்பட்டது. ஆனால் இப்புாது இருக்கின்ற சூழல் என்பது அவ்வாறானதாக தென்பவில்லை.
இருக்கின்ற சிறு நம்பிக்கைகளை சிதறடித்து இங்கு வாழுகின்ற அழவில் சிறிய தேசிய இனங்களை குழிதோண்டி புதைக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையாகவே எங்களுக்கு தென்படுகின்றது. மிக முக்கியமாக சமாதானம்பற்றியோ அல்லது இங்கு வாழுகின்ற மக்களின் உண்மை நிலவரங்கள் பற்றியோ அவர்களிற்கான நீதி வழங்குதல் பற்றியோ இந்த அரசாங்கத்திடம் எந்த எண்ணங்களுா சிந்தனைகளோ இல்லை.
அரசாங்கம் இந்த தடைகளை கொண்டுவந்திருப்பதென்பது மிக ஆபத்தானது. சர்வதேச சமூகம் இதில் அதிகமான கவனத்தை செலுத்த வேண்டும்.
இது இன்று நெற்றல்ல. பலஆண்டுகாலமாக அரசு ஏமாற்றிவருகின்றது. சர்வதேச சமூகத்தை தனது பிடிக்குள் வைத்துக்கொள்வதும், கிட்டத்தட்ட 3ான்குலட்சம் மக்கள் முள்ளிவாய்ககாலில் இருக்கின்றபோது, அங்கு 70ஆயிரம் மக்கள்தான் இருப்பதாக கூறி 70ஆயிரம் மக்களிற்கான உணவைமட்டுமே அனுப்பியிருந்தது.
நான்குலட்சம் மக்கள் பட்டினியிலே சாகடிக்கப்பட்டார்கள். இளைஞர்கள் சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள். இவ்வாறான கால சூழலை உலகம் புரிந்துகொள்ளவேண்டும்.
அதேபோல இப்போதுள்ள களச்சூழலில் மிக முக்கயமாக தமிழர்கள் இந்த உலக பந்திலே அநியாயமாக கொல்லப்பட்டார்கள். அவர்கள்மீது போர் குற்றம்புரியப்பட்டது. அவர்கள் போர்ரீதியாக இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்.
அந்த அப்படையில் அவர்களிற்கான நீதி வேண்டும் என தமிழர்கள் முயற்சி செய்கின்றபோது, புலம்பெயர் அமைப்புக்கள் கூடுதலான பங்களிப்பை செய்கின்றனர். பல்வேறு நாடுகளுடன் அவர்களின் பேச்சுக்கள் இருக்கின்றன.
அவர்களி் செயற்பாடுகள் அங்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதேவேளை பல நபர்கள் இவ்விடயங்களை கையாழுகின்றார்களர்.
அதனால் ஒரு அதிகார ரீதியாக கையிலே ஆயுதங்களை வைத்துக்கொண்டு பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு ஊடாக இவர்களை கைது செய்தல், அடைத்தல் போன்ற விடயங்களை கையாள முனைகின்றது.
அந்தவகையில்தான் பலரை விசாரணைக்குட்படுத்தியிருக்கின்றார்கள். கைது செய்கின்றார்கள். சிறையிலே அடைக்கின்றார்கள். இவைகள் எல்லாம் மிகப்பெரிய கொடுரமான நிகழ்வாகவே கொண்டு செல்லப்படுவதை நாங்கள் உணர்கின்றோம்.
சர்வதேச சமூகம் இவ்விடயத்தில் அதிகமாக கவனம் செலுத்தி இலங்கை மீதான தன்னுடைய அழுத்தங்களை கூடுதலாக பிரயோகித்து ஒரு நீதியான ஒரு நிம்மதியான வாழ்வு தமிழ் மக்களிற்கு ஏற்படக்கூடிய வகையிலும், தமிழ் பேசும் மக்கள் இந்த மண்ணிலே நிலைத்து வாழக்கூடிய வகையிலும், அவர்களுடைய பங்கு அவசியம் என்பதை இந்த இடத்திலே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம் என அவர் குறிப்பிட்டார்.