கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 31ஆம் திகதி முதல் குறித்த நடவடிக்கை இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொரோனா கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
Astrazeneca கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை இந்திய அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
இதன்காரணமாகவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், Astrazeneca கொரோனா தடுப்பூசியை இம்மாத இறுதியில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Astrazeneca கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸினைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு செலுத்துவதற்காக 2,36,000 தடுப்பூசிகள் எஞ்சியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.