ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றுள்ளதால், தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
ஈஸ்டர் தின வழிபாடுகளுக்குப் பின்னர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதியை எதிர்த்து நடவடிக்கை எடுக்க பல மாதங்கள் ஏன் காத்திருக்க வேண்டும் என அவர் இதன்போது கேள்வியெழுப்பினார்.
ஏனெனில் ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து அவர் முன்னரே எச்சரிக்கையைப் பெற்றிருந்தாலும் அலட்சியம் காரணமாக தாக்குதலைத் தடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் சஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்புடைய சிலர் இன்னும் நாடாளுமன்றத்தில் உள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.