மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட திறன் அபிவிருத்தி வகுப்பறைகள் இன்றைய தினம் (புதன்கிழமை) காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வி தேர்சியை அதிகரிக்கும் முகமாகவும் நவீன தொழில் நுற்ப முறைகள் மூலம் கற்கைகளை மேற்கொண்டு நாடத்தவும் அமைக்கப்பட்ட திறன் அபிவிருத்தி வகுப்பறைகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சித்திவிநாயகர் தேசிய பாடசாலையின் லண்டன் பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் மனித நேய நம்பிக்கை நிதியதின் நிதி ஒதுக்கிட்டில் பாடசாலை பிரதி அதிபர் பி.எல். குரூஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது விருந்தினராக கலந்து கொண்ட மன்னார் வலய கல்விப் பணிப்பாளர் கே.ஜே.பிறட்லி இன்று (புதன் கிழமை) காலை 9.30 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
லண்டன் பழைய மாணவர் சங்கம் மற்றும் மனித நேய நம்பிக்கை நிதியத்தின் நிதி உதவியுடன் நான்கு திறன் அபிவிருத்தி வகுப்பறைகள் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் வலய கல்வி பணிப்பாளர் கே.ஜே. பிறட்லி , சிறப்பு விருந்தினர்களாக மன்னார் கோட்ட கல்வி பணிப்பாளர் பு.சந்தியோகு , மனித நேய நம்பிக்கை அமைப்பின் உறுப்பினர்கள் நலிவுற்றோர் நலன் காப்பு நிதிய அதிகாரிகள் , சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் உப அதிபர் பழைய மாணவர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.