துணிச்சலுள்ள பெண்மணிக்கான சர்வதேச விருதினைப் பெற்ற மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா கௌரவிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் நகர மண்டபத்தில் நேற்று(சனிக்கிழமை) குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு, அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
மன்னார் பஸார் பகுதியிலிருந்து மாலை அனுவித்து இசை வாத்தியத்துடன் ஊர்வலமாக சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா அழைத்து வரப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து நகர மண்டபத்தில் பிரதான கௌரவிப்பு நிகழ்வுகள் இடம் பெற்றது.
பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கலந்து கொண்டதோடு, சர்வ மத தலைவர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் திணைக்கள அதிகாரிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் பெண்கள் அமைப்பு என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது 2021 ஆம் ஆண்டிற்கான துணிச்சலுள்ள பெண்மணிக்கான சர்வதேச விருதினைப் பெற்ற சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜா பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.