அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவு சிறிதுசிறிதாக நிறைவேறி வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொட்டகலை சீ.எல்.எஃப். வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பெருந்தொட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தைப் பெற்றுக்கொடுத்து அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவை நிறைவேற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனை யாரும் நிராகரிக்கவோ அல்லது மறுக்கவோ முடியாது என்று தெரிவித்துள்ள அவர், நுவரெலியா மாவட்டத்திற்கு உரித்தான வகையில் கொட்டகலையில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளதாகவும் இதற்கான பணிகள் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நிறைவடையும் என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, சிலர் கட்சியைக் காட்டிக்கொடுத்தனர் என்பதுடன் சிலர் தலைவர் தொண்டமானை முதுகில் குத்தினர் என்றும் தெரிவித்துள்ள ஜீவன் தொண்டமான், பழையவைகளை மறக்கக் கூடாது எனவும் வரலாறும் முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.