கரைச்சியில் வீதி விளக்குகளை பொருத்தவதற்கு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தடை விதித்துள்ளார் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”கரைச்சி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டு பாதீட்டின் சுமார் 8 மில்லியன் ரூபாய்21 வட்டாரங்களுக்கு மின்குமிழ் பொருத்துத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிதி குறித்த தேவையை நிறைவு செய்வதற்காக வங்கி கணக்கில் இடப்பட்டிருந்தது குறித்த நிதியை விடுவித்து இருபத்தொரு வட்டாரங்களிலும் தலா 45 வீதி விளக்குகளை பொருத்துவதற்கு 2020 ஆம் ஆண்டு பாதீடு அங்கீகாரத்தை வழங்கியிருந்தது.
இந்த வேலைத்திட்டத்தினை நிறேவற்ற உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பிரபாகரன் தடைவிதித்துள்ளார் என்றும் ஆளுநர் அவர்களுக்கு முகவரியிட்டு சபையினால் அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பத்தை அனுமதி மறுத்து திருப்பி அனுப்பி இருப்பது மோசமான நடவடிக்கை என்றும் சபையினால் நிறைவேற்ற பட்ட பாதீட்டு செயற்றிட்டங்களை தனது சுய விருப்பின் அடிப்படையில் தடுத்திருப்பது உள்ளூராட்சி சபைகளின் சுயாதீனத்திற்கும் மக்கள்.
ஆணைக்கும் எதிரானது என்பதுடன் ஆளுநருக்கு முன்னளிக்க வேண்டிய கடிதத்தை ஒரு கீழ் நிலை அதிகார திருப்பி அனுப்பி இருப்பது வரம்பு மீறிய செயலாகும் இது தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்கும் சபை தீர்மானம் அனுப்பி வைக்கப்படும் என்றும் 2021 ஆம் ஆண்டு தை மாதம் 25 ஆம் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு மூன்று மாதங்கள் கழித்து நேற்றைய தினம் மீள திருப்பி அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.