அஜித்தின் டாப் 10 பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றான மங்காத்தா படத்தை எப்போது ரீ ரிலீஸ் செய்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 23ஆம் திகதி மங்காத்தா படம் ரீ ரிலீஸானது.
முதல் நாள் திரையரங்கங்கள் திருவிழா கோலமாக மாறியது. மேலும் புதிய படங்களுக்கு இணையாக முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்நிலையில், 6 நாட்களை கடந்திருக்கும் மங்காத்தா படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 20 கோடி வசூல் செய்துள்ளது.
















