2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்க தேசிய கிரிக்கெட் அணி மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இரண்டுக்கும் முன்னதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி நாடு திரும்பும் என்ற தகவல்கள் வெளியானதை அடுத்து, குயின்டன் டிகொக் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தை விமர்சித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான மோதலுடன் தொடர்புடைய சர்வதேச வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக பல அணிகளுக்கான பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, ஐ.சி.சி ஏற்பாடு செய்த சார்ட்டர் விமானங்களுக்காக காத்திருக்கும் போது பல தரப்பினர் இந்தியாவில் தங்கியுள்ளனர்.
மார்ச் 1 அன்று சூப்பர் 8 கட்டத்தில் இந்திய தேசிய கிரிக்கெட் அணியிடம் தோல்வியடைந்த பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது.
அதே நேரத்தில் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதியில் நியூஸிலாந்திடம் தோல்வியடைந்த பின்னர் அதன் 2026 டி:20 உலகக் கிண்ணத்தின் பயணமானது நிறைவுக்கு வந்தது.
அப்போதிருந்து, இரு அணிகளும் பயண ஏற்பாடுகளுக்காக இந்தியாவில் தங்கியுள்ளன.
கரீபியன் அணி வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து சுமார் ஒரு வாரமாக நாட்டில் உள்ளது.
அதே நேரத்தில் தென்னாப்பிரிக்க அணி மூன்று நாட்களாகக் காத்திருக்கிறது. இதற்கு நேர்மாறாக கடந்த வியாழக்கிழமை நடந்த இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து இந்தியாவிடம் தோற்கடிக்கப்பட்டது.
ஆனால் அவர்கள் தொடரிலிருந்து வெளியேறிய இரண்டு நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமை நாட்டிற்கு புறப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலை, டி கொக் ஐ.சி.சி.யின் வெளிப்படையான சமநிலையின்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
சில அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக செல்வாக்கைக் கொண்டிருக்கக்கூடும் என்றும் அவர் சாடினார்.












