உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டி-56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மகரகம பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு ரகசியமாக கிடைத்த தகவலின்படி, சந்தேக நபர் அரவலா பகுதியில் கைது செய்யப்பட்டார்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக முன்னர் நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்றும், பல வீடுகளில் புகுந்து திருடியவர் என்றும் பொலிசார் கூறுகின்றனர்
சந்தேக நபர் இந்தத் துப்பாக்கியை ஏதேனும் குற்றத்திற்காகப் பயன்படுத்தினாரா? அதை யாரிடமாவது கொடுத்தாரா? பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.














