• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/24
in இலங்கை, முக்கிய செய்திகள்
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிற்குள் பெண்ணொருவரின் சடலம் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட தெல்தெனிய கொலை வழக்கில், முக்கிய சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தகவலின்படி, சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேற்று (24) வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் பேருந்தில் பயணிப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, யாழ்ப்பாணக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் வலன ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டபோது, ​​பிரதான சந்தேக நபர் முகக்கவசம் அணிந்திருந்ததாகவும், அவரது மனைவி ஒரு முஸ்லிம் பெண்ணைப் போல வேடமணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

விசாரணையின்போது, ​​வவுனியாவிலிருந்து குருணாகலுக்குச் சென்று தனது ஏனைய இரண்டு குழந்தைகளைப் பார்த்துவிட்டு, பின்னர் பொலிஸாரிடம் சரணடையத் திட்டமிட்டிருந்ததாக அந்தச் சந்தேகநபர் புலனாய்வாளர்களிடம் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளரான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகலவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சந்தேக நபர்கள் கடந்த சில நாட்களாக நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் தங்கியிருந்ததாகவும், கடல் வழியாக நாட்டை விட்டு வெளியேற முயன்றதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்களை நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றினுள் பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தெல்தெனிய பொலிஸாருக்கு தகவல் அளித்ததையடுத்து, இது குறித்த விசாரணை தொடங்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், வாகனம் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டனர்; பின்னர் அதனை வலுக்கட்டாயமாகத் திறந்து சோதனையிட்டபோது, ​​உள்ளே சடலம் இருப்பதைக் கண்டறிந்தனர். 

உயிரிழந்தவர் அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய, வெலிகமவைச் சேர்ந்த 33 வயதுடைய பிசியோதெரபிஸ்ட் (physiotherapist) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது காதலர், அப்பெண்ணின் உடலை வாகனத்தில் கொண்டு வந்து அந்த இடத்தில் விட்டுவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணையில், அந்தப் பெண் ஜூன் 3 முதல் ஜூன் 16 வரை நுவரெலியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தது தெரியவந்தது. 

அந்தக்காலகட்டத்தில் அவர் சுயநினைவின்றி இருந்தபோது, ​​அவரது காதலர் அவரைத் தூக்கிச் செல்வதை சிசிடிவி (CCTV) காட்சிகள் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தெல்தெனிய பொலிஸாரிடம் அளிக்கப்பட்ட ஆரம்பக்கட்ட முறைப்பாடு அப்பெண்ணின் காதலன் எனக் கருதப்படும் ஒருவரால் வழங்கப்பட்டது என்பதையும் பொலிஸார் உறுதிப்படுத்தினர். 

இருப்பினும், அவர் பின்னர் தலைமறைவானதுடன், கைது நடவடிக்கையிலிருந்தும் தப்பித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: JaffnapoliceTeldeniyaகைதுதெல்தெனியபொலிஸார்யாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Next Post

கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் இன்று 24 மணிநேர நீர் வெட்டு!

Related Posts

ரொனால்டோ சாதனை; உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது போர்த்துக்கல்!
ஆசிரியர் தெரிவு

ரொனால்டோ சாதனை; உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது போர்த்துக்கல்!

2026-06-24
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!
இலங்கை

கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் இன்று 24 மணிநேர நீர் வெட்டு!

2026-06-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-24
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

செம்மணியில் அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு – மீண்டும் ஜூலையில் ஆரம்பம்!

2026-06-23
இலங்கையில் இனி தேர்தல் வாக்களிப்பில் ‘அழியாத மை’ பூசும் நடைமுறை நீக்கம்!
இலங்கை

இலங்கையில் இனி தேர்தல் வாக்களிப்பில் ‘அழியாத மை’ பூசும் நடைமுறை நீக்கம்!

2026-06-23
இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!
இலங்கை

இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

2026-06-23
Next Post
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் இன்று 24 மணிநேர நீர் வெட்டு!

ரொனால்டோ சாதனை; உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது போர்த்துக்கல்!

ரொனால்டோ சாதனை; உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது போர்த்துக்கல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23

ரொனால்டோ சாதனை; உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது போர்த்துக்கல்!

0
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் இன்று 24 மணிநேர நீர் வெட்டு!

0
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு – மீண்டும் ஜூலையில் ஆரம்பம்!

0

ரொனால்டோ சாதனை; உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது போர்த்துக்கல்!

2026-06-24
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் இன்று 24 மணிநேர நீர் வெட்டு!

2026-06-24
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-24
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு – மீண்டும் ஜூலையில் ஆரம்பம்!

2026-06-23

Recent News

ரொனால்டோ சாதனை; உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது போர்த்துக்கல்!

2026-06-24
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் இன்று 24 மணிநேர நீர் வெட்டு!

2026-06-24
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.