வடஇந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாநிலத் தலைநகர் சிம்லாவில் இருந்து வடக்கே சுமார் 393 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சம்பா (Chamba) மாவட்டத்தின் கரடுமுரடான மலைப்பாதைப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விபத்து நடந்த போது பேருந்தில் மொத்தம் 18 பயணிகள் பயணித்ததாகவும், காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, பகுதியில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 185-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுப் போக்குவரத்துப் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

















