மூன்று வகையான காக்கை வகைகள் உள்ளன. அதாவது உடல் முழுவதும் கருமை நிறம் கொண்ட அண்டங்காக்கை வகை. அதன் பின் கழுத்தில் சாம்பல் நிறம் கொண்ட மணி காக்கை. அதோடு அனைவராலும் அதிசயமாக பார்க்கப்படும் அரிதான வெள்ளை காக்கை.
சனி பகவானின் வாகனமாக திகழும் காகங்கள் நமது ஜாதகத்தோடு மிகவும் தொடர்புடையதாக உள்ளது. மேலும் பித்ருக்களின் வடிவமாக காக்கைகள் உள்ளன. அதாவது நம் முன்னோர்கள் அதாவது இறந்து போனவர்கள் நம்மிடையே காகங்களாக வளம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நாம் அனைவரும் ஆழமாக நம்பக்கூடிய ஒன்றாகும்.
அதேபோல் காகங்களும் நாம் அளிக்கும் உணவுகளை பெற்றுக் கொண்டு பித்ருக்களின் வடிவமாக நமக்கு ஆசிகளையும் வழங்குகிறது. அதாவது காக்கைகள் பற்றி யாரும் ஒரு மூடநம்பிக்கை என்று எளிதில் கடந்து விட முடியாது. காகங்களின் குறிப்புகளை உணர்ந்து அதன் பலன்களை அறியலாம். அதாவது ஒரு கருப்பு காகம் தனிப்பட்ட முறையில் நமது வீடுகளில் அமர்ந்து கரைகிறது என்று சொன்னால் அது மிக தீய சகுனம் ஆகும்.
அதேபோல் ஒரு மனிதனின் தலை மேல் ஒரு காக்கை தொட்டுவிட்டால் அதுவும் தீய சகுனம் நமக்கோ நமது குடும்பத்தாருக்கும் ஏதோ ஒரு ஆபத்து நிகழ்வதற்கான அறிகுறியாகும். மணி காக்கை என்று கூறப்படும் கழுத்தில் சாம்பல் நிறம் கொண்ட காக்கைகள் வீட்டில் அமர்ந்து கரைவது நல்ல சகுனத்திற்கு உகந்ததாகும்.
அதனைத் தொடர்ந்து வெள்ளை காகங்கள் எந்த வகையிலும் பார்ப்பது ஜோதிட கணிப்பின்படி ஒரு தீய சகுனத்தை குறிப்பதே ஆகும். குறிப்பாக ஒரு வெள்ளை காகம் ஆனது தனியாக தென்பட்டால் அது நாட்டிற்கும் தீய சகுனத்தை குறிப்பதே ஆகும் .