டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் இறந்தநிலையில் வைக்கப்பட்ட யுவதியின் சடலத்திற்கான அவமரியாதை ஏற்படுத்தபட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்ரஸினால் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று நோர்வூட் பொலிஸாரின் கோரிக்கைக்கமைய ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தின் பதில் நீதிவான் பி.தமேந்தி பெர்னாண்டோவினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டின் 15ம் இலக்க குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவில் 106(01) இன் படி டிக்கோயா ஆதார மருதாதுவமனை நூழைவாயில் ஹட்டன் நோர்வூட் பிரதான வீதி அல்லது வேறு ஏதேனும் பொதுமக்கள் கூடும் இடத்தில் எந்த ஒரு சட்டவிரோத ஊர்வலம் ஆர்ப்பாட்டம் அல்லது ஒன்றுகூடலையும் நடத்துவதை தவிர்க்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ரவி குழந்தைவேல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஹட்டன் டிக்கோயா நகரசபையின் துனைமேயர் பெருமாள் சுரேந்திரன் ஆகியோருக்கு இந்த நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவிக்கையில் இன்றைய தினம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடபடுகிறது ஆனால் நாங்கள் அங்கு சென்றது ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கு அல்ல டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் பிரேத அறையில் அவமரியாதை ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படும் யுவதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே நாங்கள் அங்கு சென்றோம் ஆனால் நோர்வூட் பொலிஸார் மற்றும் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலை நிர்வாகமும் இனைந்து நீதிமன்ற தடை உத்தரவினை பெற்று இதனை தடை செய்துள்ளார்கள் ஆனால் இந்த யுவதிக்கு நடந்த அசாம்பவிதம் தொடர்பாக உரிய விசாரணைகள் இடம் பெறவில்லை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என குறிப்பிட்டார் .













