கோவக்ஸ் திட்டத்தின் மூலம் ஜூன் மாதத்திற்குள் இலங்கை அதிக தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் என எதிர்பாப்பதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்திற்குள் இலங்கைக்கு 1,440,000 டோஸ் கிடைக்கும் என்றும் இதற்கு எவ்வித கட்டணமும் அறவிடப்படாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மக்கள் தொகையில் 20 சதவீதத்தை உள்ளடக்கும் வகையில் இலங்கைக்கு 8.4 மில்லியன் தடுப்பூசிகளை கோவக்ஸ் திட்டத்தின் மூலம் வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மார்ச் மாதத்தில் இலங்கைக்கு 264,000 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மே மாத இறுதியில் அல்லது ஜூன் தொடக்கத்தில் மேலதிகமாக 1,440,000 டோஸ் தடுப்பூசிகளும் மீதமுள்ளவை 2021 அரையாண்டு கலப்பகுதிக்கு பின்னர் வந்தடையும்.
இந்த அளவுகள் அனைத்தும் நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்பட்டவை மற்றும் இலங்கைக்கு எந்த செலவுமின்றி வழங்கப்படுகின்றன என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும் அதற்கு பிந்திய நடவடிக்கைகளுக்கும் என 2.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.