இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் நாட்டினை முழுமையாக முடக்க எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சீன பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக தாக்கத்தை கருத்திற்கொண்டு அரசாங்கம் என்ற ரீதியில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறினார்.
இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதே தற்போது அரசாங்கத்தின் முன்னுரிமையாகவுள்ளது என குறிப்பிட்ட பிரதமர், அவ்வாறான முதலீட்டாளர்களின் இலங்கை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு சீனாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
மேலும் தொற்றுநோயால் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கு தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த சீனாவுடன் தமது அரசாங்கம் நெருக்கமாக தொடர்ந்து பணியாற்ற எதிர்பாத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.