பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் தாமதமாக வெளியாகியதாலேயே நேற்றைய தினம் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளர்கள் பதிவாகியதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அதிகாரி, நாட்டில் அதிக எண்ணிக்கையிலான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதால் கடந்த சில நாட்களாக பி.சி.ஆர் முடிவு அறிக்கைகளை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு நாளைக்கு சுமார் 15000 பி.சி.ஆர் மாதிரிகள் சோதனை செய்யப்படுவதாகவும் சில சந்தர்ப்பங்களில் இது ஒரு நாளைக்கு 20 ஆயிரமாக அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்து 500இற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், நாட்டில் கடந்த சில நாட்களாக ஒருநாள் பாதிப்பு 1500இற்கும் மேலாக பதிவாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.