கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகளவு காணப்படும் பகுதிகளை இனங்கண்டு, முடக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில் தற்போதும் உடன் அமுலுக்கும் வரும் வகையில், 4 மாவட்டங்களின் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அந்தவகையில் மாத்தறை மாவட்டம்- மாத்தறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவு, உயன்வத்த கிராம சேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோன்று கண்டி மாவட்டம்- கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வலகம்பாய கிராம சேவகர் பிரிவிலுள்ள கொஸ்கஸ்தன்ன மற்றும் திப்புட்ட ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் மாத்தளை மாவட்டம்- ரத்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடஹவிட்ட கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் புத்தளம் மாவட்டம்- கொஸ்வத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெதகிரியான கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, குருணாகல் மாவட்டம்- கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிகதலுபொத கிராம சேவகர் பிரிவு, தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.