ரொக்கெட் தாக்குதல்களுக்கு தொடர்ந்து பலமாக பதிலளிப்பேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி அளித்துள்ளார்.
காசாவில் பாலஸ்தீனியர்களுடனான மோதல் ஏழாம் நாளாக தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காசாவில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாலஸ்தீனிய போராளிகள் டெல் அவிவ் நோக்கி ரொக்கெட் தாக்குதலை நடத்தியதாகவும் இதன்போது அங்குள்ள மக்கள் தப்பி ஓடிய காணொளிகளும் வெளியாகியிருந்தன.
இதேவேளை அதிகரித்து வரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க சர்வதேச சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.
நேற்று சனிக்கிழமையன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஆகியோருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தாக்குதல்கள் குறித்து கவலை வெளியிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மோதலை தடுப்பது குறித்து ஐ.நா.பாதுகாப்பு சபைக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.