அவுஸ்ரேலியாவின் உதவியுடன் ஒட்சிசன் சிலிண்டர்கள் உட்பட முக்கியமான உபகரணங்களை யுனிசெப் நிறுவனம் சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு உதவும் வகையில் இந்த பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவுஸ்ரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களத்தின் நிதியுதவியுடன் இந்தப்பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பொருட்களை இலங்கைக்கான அவுஸ்ரேலிய பணிக் குழுவின் தலைமை அதிகாரி டேவிட் ஹோலியும் ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் எம்மா பிரிகாமும் யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டியும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிடம் வழங்கி வைத்தனர்.
அதன்படி, 291 ஒட்சிசன் சிலிண்டர்களும் 342 ஒட்சிசன் ரெகுலேட்டர்களும் 2490 முகக்கவசங்களும் 20 தீயணைப்பு கருவிகளும் நாட்டுக்கு வழங்கிவைக்கப்பட்டன.