நாட்டில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்குமாயின் சிறுபான்மை சமூகத்திற்கு உள்ள வர்த்தக நலன்கள் இல்லாமல் போவதற்கு வாய்ப்புள்ளதென முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் ஆரிப் சம்சுதீன் மேலும் கூறியுள்ளதாவது, “எமது சமூகத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.
போட் சிட்டி சட்டமூலத்தின் ஊடாக சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே செல்லும் அபாயம் இருக்கின்றது. சிலவேளைகளில் சிறுபான்மை சமூகத்தின் வர்த்தக நலன்கள், இல்லாமல் போகலாம்.
போட் சிட்டியானது ஒரு தனி நாடு போன்று இயங்கும் நிலைமையே காணப்படுகின்றது. அங்கு செல்வதற்கு போர்ட் சிட்டி ஆணைக்குழுவின் அனுமதி பெற்றே உள் நுழைய முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.