நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் கீழ் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 728 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று (27) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விநியோகத்தை முடக்குதல், போதைப்பொருள் தேவையைக் குறைத்தல், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தல், போதைக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளித்தல் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் இன்றைய அறிக்கையின்படி, 09 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கையின் போது ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் தொடர்பாக 498 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மொத்தம் 767 கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, ஒரு சந்தேகநபர் புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












