மட்டக்களப்பிலும் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட 16 அமைப்புகள் இணைந்து, பணி பகிஸ்கரிப்பு போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட மட்டக்களப்பிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் பணி பகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனால், வைத்தியசாலை நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பதமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த போராட்டம் தொடர்பாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளதாவது, “கொரோனா அச்சுறுத்தலான இந்த காலப்பகுதியில் அர்ப்பணிப்புமிக்க சேவையினை தாதியர்கள் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள ஓரு துறைக்கு மட்டுமே அனைத்து வரப்பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன.
இதில் நாங்கள் புறக்கணிக்கப்படுகின்றோம்” என அவர்கள் குற்றம் சுமத்தி இருந்தனர்.