கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் சில்லறை விற்பனை 1.4 சதவீதம் சரிந்ததாக, தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது.
சுப்பர் மார்க்கெட்டுகளில் உணவு வாங்குவதற்கு பதிலாக, மீண்டும் திறக்கப்பட்ட மதுபானசாலைகள் மற்றும் உணவகங்களை மக்கள் தேர்வு செய்ததே இந்த சரிவிற்கு காரணமாகும்.
இதற்கு மாறாக, உணவு அல்லாத கடைகளில் விற்பனை வெளிப்புற தளபாடங்களுக்கான தேவை அதிகரித்தது. அத்துடன் மக்கள் கடைகளுக்கு திரும்பியதால் ஒன்லைன் விற்பனையின் வீதம் குறைந்தது.
ஒன்லைன் விற்பனையின் வீதம் வீழ்ச்சியடைந்த தொடர்ச்சியான மூன்றாவது மாதம் இதுவாகும். ஆனால் தொற்றுநோய்க்கு முன்னர் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் காணப்பட்ட அளவை விட கிட்டத்தட்ட 60 சதவீதம் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் உணவு விற்பனையின் அளவு 5.7 சதவீதம் குறைந்துள்ளது என்று ஓஎன்எஸ் தெரிவித்துள்ளது.
தொற்றுநோய்க்கு முந்தைய 2019ஆம் ஆண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடும்போது, விற்பனை 8.1சதவீம் அதிகரித்துள்ளது என்று டெஸ்கோ தெரிவித்துள்ளது.