மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) 2 ஆம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை மற்றும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியன இணைந்து, ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன
மன்னார் தள்ளாடி 54 படை பிரிவை சேர்ந்த இராணுவத்தின் அனுசரையுடன் இடம்பெற்ற இந்த நடவடிக்கையில் நேற்று முன்தினம் 494 பேருக்கும் நேற்று இரண்டாம் பகுதியினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.