இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே கொரோனாவினால் உயிரிழப்போரின் விகிதம் குறைவாக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்ற வைத்தியர்கள் மற்றும் தாதியர்களை பாராட்டுகின்றேன் எனவும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரனா தொற்றாளர்களில் சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிகிச்சையளிப்பதற்கான கொரனா சிகிச்சை நிலையம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இன்று திறந்துவைக்கப்பட்டது.
இதில் சுமார் 50 கட்டில்கள் இடப்பட்டுள்ளதுடன் ஆண்களுக்கான சிகிச்சை பிரிவு, பெண்களுக்கான சிகிச்சை பிரிவு, சிறுவர்களுக்கான சிகிச்சை பிரிவு ஆகியனவும் உருவாக்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளரினால் ஒரு தொகை உபகரணங்களும் வைத்தியசாலைக்கு வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.