‘த ஸீரோ சான்ஸ் ஸ்டோரீஸ் 2021’ குறுந்திரைப்படப் போட்டியில், இளம் இயக்குனர் பிரபுவின் இயக்கத்தில் உருவான ‘துண்டு பிரசுரம்’ குறுந்திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது.
‘சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவில் குடியேற முடியாது’ எனும் தொனிப்பொருளினை மையமாக கொண்டு இந்த குறுந்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சிறந்த காட்சியமைப்புகள், நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கிய இவ் குறுந்திரைப்படம், சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்குச் சென்ற ஒரு தந்தையைபற்றிய கதை ஆகும்.
அவரது மகன் அவரது தந்தை பாதுகாப்பாக போய் சேர்ந்துவிட்டாரா என்பதை அறிய மிகவும் ஆர்வமாய் இருக்கிறார். ஆனால் துரதிஷ்டவசமாக அவரது தந்தைக்கு நிகழ்ந்த விபத்தை அறிந்ததும் தாயும் மகனும் அதிர்ச்சி அடைகின்றனர்.
மிகவும் உணர்வுப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த குறுந்திரைப்படம், தேர்ந்த நடுவர் குழாத்தினால் பேராதரவுடன் முதலிடத்தை பெற்றுள்ளது.
குறிப்பாக இந்த குறுந்திரைப்படம் இயக்குனர் பிரபுவின், முழு பங்களிப்பினால் உருவாக்கப்பட்டது என்பது சிறப்பம்சமாகும்.
கெமரா, எடிட்டிங், எழுத்து மற்றும் இயக்கம் என அனைத்தையும் நேர்த்தியாக செய்த இயக்குனர் பிரபு, இதன்மூலம் பன்முக திறமை கொண்டவர் என்பதை இலங்கை சினிமாவுக்கு மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளார்.
‘படகு மூலம் அவுஸ்ரேலியா செல்ல முயற்சிப்பது சட்ட விரோதமாகும். இந்த ஆபத்தான பயணத்தில் நீங்கள் உயிரைக் கூட இழக்கக்கூடும். அத்துடன் நீங்கள் தடுத்து நிறுத்தப்படுவீர்கள் அல்லது சட்டவிரோதமாக குடியேற எவ்வித வாய்ப்பும் இல்லை’ என்பதை நாங்கள் எப்போதும் நினைவுக்கொள்ள வேண்டும்.