• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/01/30
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தலங்களுக்கு பிரவேசிக்கும் வாய்ப்பை எளிதாக்கும் வகையில் டிஜிட்டல் அனுமதிப் பத்திரம் அறிமுகப்படுத்தும் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் சுற்றுலா விசாக்களை விரைவாகச் செயற்படுத்துவது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக நாட்டில் உள்நாட்டு விமான சேவைகளை நெறிப்படுத்துதல், அவற்றில் நிலவும் சிக்கல்கள் குறித்தும், கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு இடையில் பேருந்து சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள பேரவாவி சுத்திகரிப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீயாய்வு செய்யப்பட்டது.

மேலும், மகாவலி அதிகாரசபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான விடுதிகளை சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்காக எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பிலும் சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சுற்றுலா பொலிஸாரின் உதவியுடன் எவ்வாறு தீர்க்க முடியும் என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

திமிங்கலங்களை பார்வையிடும் மையங்களில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூட் நிலுக்ஷன், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர்/பிரதான நிறைவேற்று அதிகாரி கிரிஷான் பாலேந்திர ஆகியோருடன் அரச அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவுகளின் சிரேஷ்ட அதிகாரிகள், சுற்றுலாத் துறையின் முக்கிய தரப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

blank blank blank blank blank blank blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரதீப் ரங்கநாதனின் ‘LIK ‘ ரிலீஸ் எப்போது

Next Post

முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!

Related Posts

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!
இலங்கை

2026-07-31
ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை
அம்பாறை

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

2026-07-31
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

2026-07-31
அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை!

ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!
இலங்கை

ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை!

2026-07-31
கைவினைப்பொருட்கள் ஆணையத்தை நிறுவுவதற்கான திட்டங்கள்!
இலங்கை

கைவினைப்பொருட்கள் ஆணையத்தை நிறுவுவதற்கான திட்டங்கள்!

2026-07-31
Next Post
முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி  வெற்றி!

முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!

மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட நிறைவேற்றுச் சபை கூட்டம்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

0
ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

0
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

0
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.