கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 79 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
மேலும் மட்டக்களப்பில் வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையில் 6,356 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் மாவட்டத்தில் இதுவரை 65,024 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் நா.மயூரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது வைத்தியர் நா.மயூரன் மேலும் கூறியுள்ளதாவது, கடந்த 24மணி நேரத்தில் 79 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் களுவாஞ்சிகுடியில் 11பேரும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17பேரும் செங்கலடி பகுதிகளில் 14பேரும் ஏறாவூர், வாழைச்சேனை, காத்தான்குடி ஆகிய பகுதிகளில் தலா 6பேரும் பட்டிப்பளை, ஆரையம்பதி போன்ற பகுதிகளில் தலா மூன்று பேரும், கிரான்,ஓட்டமாவடி பகுதிகளில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய மாவட்டத்தில் இதுவரை 7339 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 100பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 946பேர், தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 3 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படவுள்ளன.
மட்டக்