கிளிநொச்சியில் ‘இயக்கி’ உணவு விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் நிதிப் பங்களிப்பில், நலிவுற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தினால் உருவாக்கப்பட்ட ‘இயக்கி’ உணவு விற்பனை நிலையம் நேற்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இயக்கி’ உணவு விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்த உணவகத்தில் பாரம்பரிய உணவுகளை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ஜெயராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.