இலவசக் கல்வியை இராணுவ மயமாகும் கொத்தலாவல சட்ட மூலத்தை உடனடியாக இரத்து செய்யக் கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் வலயக்கல்வி பணிமனைக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், இலவசக் கல்வியை இராணுவ மயமாகும் கொத்தலாவல சட்ட மூலத்தை உடனடியாக இரத்து செய்யுமாறும் 24 வருட ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு உடனடி தீர்வினை வழகுமாறும் வலியுறுத்தினர்.
மன்னார் வலயக்கல்வி பணிமனைக்கு முன்பாக ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டப் பேரணி, மன்னார் பஜார் வீதியூடாக சென்று மன்னார் மாவட்டச் செயலக வீதியை சென்றடைந்தது. அங்கிருந்து மீண்டும் மன்னார் வலயக்கல்வி பணிமனை வீதியை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.