நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயற்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 8 பல்கலைக்கழகங்கள் செயற்பட்டு வந்துள்ளதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பா.ஜ.க உறுப்பினரான தர்மேந்திரன் எழுத்துமூலம் மக்களவையில் பதிலளித்துள்ளார். யு.ஜி.யின் அனுமதி பெறாமல் இயங்கி வரும் மேலும் இரண்டு பல்கலைக்கழகங்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக எட்டு, டெல்லியில் ஏழு, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா இரண்டு பல்கலைக்கழகங்கள் போலியாக செயற்பட்டு வந்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பல்கலைக்கழகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.