ரஸ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவில் தயாரிக்க உள்ளதாக ரெட்டிஸ் லேபராட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசியின் டோஸ்கள் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதங்களில் கிடைக்கும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் சுமார் 80 நகரங்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி அனுப்பிவைக்கப்படுவதாகவும் நாடு முழுவதும் உள்ள சுமார் 300 மருத்துவமனைகளை தொடர்பு கொண்டு விநியோகித்து வருவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேநேரம் இந்த தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 91.6 சதவீதம் பலனளிப்பதாகவும் மூன்றாம் கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.