மட்டக்களப்பு- மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று (திங்கட்கிழமை) மாலை ஆரம்பிக்கப்பட்டது.
நேற்று ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், பண்டைய தமிழர்களின் நடைமுறைக்கு அமைவாகவே நடைபெற்றது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆலய நிர்வாகத்தினர் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் ஆலயத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
ஆலயத்தின் வருடாந்த உற்சவம், எதிர்வரும் 22 ஆம் திகதி மட்டக்களப்பு வாவியில் முருகப்பெருமானுக்கான தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.