காணாமற்போனோரை கண்டறிவதே காணாமற்போனோர் அலுவலகத்தின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு நேற்று (திங்கட்கிழமை), அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
காணாமற்போனோரை கண்டறியும் ஆணைக்குழுவின் முக்கிய பணி, அவர்கள் எப்படி காணாமல் போனவர்கள் என்பதை கண்டறிவதே. அதுதான் சட்டம் என்பதனால் அதனையே ஆணையாளர்கள் செய்ய வேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த விடயத்தை தமிழ் கட்சிகள் அரசியல் மூலதனமாக்குகின்றன என்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டு தவறானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும், அவ்வாறு தெரிவிப்பவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்புமனுவை கோரி, முழங்காலில் ஊர்ந்து வந்தவர் என்றும் சுமந்திரன் சாடியுள்ளார்.