தமிழர் பகுதியில் பத்தாயிரம் ஏக்கர் காணிக்கு ஆபத்து இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
அத்துடன், முல்லைத்தீவு குருந்துார் குளத்தை அண்டிய 170 ஏக்கர் விவசாய காணிகளை வனவளத் திணைக்களம் சுவீகரிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
குறித்த குளத்தை பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்ட மக்கள் தற்போது நடுத்தெருவிற்கு தள்ளப்படும் அபாயம் காணப்படுவதாகவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மக்களின் காணிகள் ஒருபக்கம் சுவீகரிக்கப்படும் நிலையில் மறுபுறம் சிங்கள மக்களுக்கு கணைகளை வழங்குவதற்காக காடுகள் அளிக்கப்படுவதாகவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சாட்டினார்.