கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 927பேர் பாதிக்கப்பட்டதோடு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 15இலட்சத்து 16ஆயிரத்து 094பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 022பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 37ஆயிரத்து 577பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 405பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 14இலட்சத்து 51ஆயிரத்து 495பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.