கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரத்து 256 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 73 மரணங்களும் பதிவாகி இருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ரூபவதி கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “கிளிநொச்சி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 256 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதில் தற்போது 537 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை எழுபத்தி மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அந்தவகையில் முதலாவது தடுப்பூசியினை 61 ஆயிரத்து 894 பேர் பெற்றுள்ளனர்.
அதேபோன்று முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளை 43 ஆயிரத்து 507 பேர் பெற்றுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.