ஸ்பானிய கேனரி தீவுகளில் உள்ள லா பால்மாவில் எரிமலை வெடித்ததில் வீடுகள் அழிக்கப்பட்டு, சுமார் 5,500 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கும்ப்ரே வீஜா எரிமலையில் இருந்து வரும் லாவா நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) வெடித்ததில் இருந்து இதுவரை சுமார் 100 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், மீட்புப் பணிகளைக் கண்காணிக்க ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் லா பால்மாவுக்குச் சென்றார். எரிமலை எரிமலையில் இருந்து ஏற்படக்கூடிய தீயை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அவர் கூறினார். இராணுவம் மற்றும் சிவில் காவலர்கள் உதவிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேற்கு ஆபிரிக்க நாடான மொராக்கோ அருகே கேனரி தீவு உள்ளது. இந்த தீவு ஸ்பெயின் நாட்டுக்கு சொந்தமானது ஆகும். இங்கு 80 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த தீவில் 8 எரிமலைகள் உள்ளன.
டெனிகுவியா எரிமலை கடைசியாக 1971இல் வெடித்தது, ஸ்பானிஷ் மண்ணில் நடந்த கடைசி மேற்பரப்பு வெடிப்பு இதுவாகும். அதன் பிறகு 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எரிமலை வெடித்துள்ளது.
முன்னதாக கேனரி தீவான லா பால்மாவில் ஆயிரக்கணக்கான சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள எரிமலை வெடிக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.