நாட்டில் நேற்றைய தினம் 59 ஆயிரத்து 187 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, 27 ஆயிரத்து 873 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 5 ஆயிரத்து 895 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம், 766 பேருக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதலாவது டோஸும் 23 ஆயிரத்து 616 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டது.
460 பேருக்கு மொடெர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் 71 பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸும் செலுத்தப்பட்டன.
51 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 26 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.