• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!

ஹேக்கர்களின் பிடியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்?

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/21
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கணினி கட்டமைப்புக்குள் ஊடுருவிய ஹேக்கர்கள், 50,000 அமெரிக்க டொலர்களை கிரிப்டோகரன்சி மூலம் கப்பமாகக் கோரியதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.

குறித்த விமான சேவை நிறுவனத்தின் கணினி கட்டமைப்பு தொடர்ந்தும் இணையத் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயத்தில் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

நேற்றைய தினம் (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், 2026 ஜூன் மாதத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கணினி கட்டமைப்பு ஹேக்கர்களால் ஊடுருவப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாகக் கூறி, ஹேக்கர்கள் டார்க் வெப் எனப்படும் இருண்ட இணையத் தளத்தில் தகவல்களை வெளியிட்டதாகவும், நிறுவனத்தின் கணினி கட்டமைப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகக் கூறும் காணொளியொன்றையும் வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், நிறுவனத்தின் மின்னஞ்சல் கட்டமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய தயாசிறி ஜயசேகர, அதன் இணையப் பாதுகாப்பு கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து கவலை வெளியிட்டார்.

இந்த இணையத் தாக்குதலால் விமான சேவை நிறுவனத்தின் செயற்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் எனவும், ஹேக்கர்களால் எந்த நேரத்திலும் கணினி கட்டமைப்பை முடக்க முடியும் எனவும் அவர் எச்சரித்தார்.

இதனிடையே, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் முன்னைய நிதி முறைகேடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். 

டுபாய் மற்றும் இந்தியாவிலுள்ள கணக்குகள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுகளைச் சுட்டிக்காட்டிய அவர், இச்சம்பவங்களுக்கும் நிறுவனத்தின் இணையப் பாதுகாப்புக் குறைபாடுகளுக்கும் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க முயன்ற அதிகாரி ஒருவர், பின்னர் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இணையப் பாதுகாப்புக் குறைபாடுகளைச் சரிசெய்வதற்காக சிங்கப்பூரிலுள்ள பிரதிநிதிகள் ஊடாக அமெரிக்கா உதவி வழங்க முன்வந்ததாகவும், எனினும் அந்த உதவியை அரசாங்கம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

எனவே, இந்த இணைய ஊடுருவல் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கணினி கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Related

Tags: Dayasiri Jayasekerasrilankan airlinesதயாசிறி ஜயசேகரஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்ஹேக்கர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

Next Post

வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!

Related Posts

இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!
இலங்கை

இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

2026-10-21
ஹார்முஸ் நீரிணை விவகாரம்; ஈரான் உறுதியான நிலைப்பாடு!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் நீரிணை விவகாரம்; ஈரான் உறுதியான நிலைப்பாடு!

2026-10-21
திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்! 
இலங்கை

திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்! 

2026-10-21
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!
இலங்கை

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

2026-10-21
இலங்கைக்கு அருகில் தாழமுக்கம் உருவாகும் அபாயம்; மக்கள் அவதானம்!
ஆசிரியர் தெரிவு

இலங்கைக்கு அருகில் தாழமுக்கம் உருவாகும் அபாயம்; மக்கள் அவதானம்!

2026-10-21
சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் புதிய அனுகூலங்கள்!
இலங்கை

சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் புதிய அனுகூலங்கள்!

2026-10-20
Next Post
வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!

வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!

வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!

0
கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!

ஹேக்கர்களின் பிடியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்?

0
இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

0
ஹார்முஸ் நீரிணை விவகாரம்; ஈரான் உறுதியான நிலைப்பாடு!

ஹார்முஸ் நீரிணை விவகாரம்; ஈரான் உறுதியான நிலைப்பாடு!

0
திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்! 

திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்! 

0
வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!

வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!

2026-10-21
கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!

ஹேக்கர்களின் பிடியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்?

2026-10-21
இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

2026-10-21
ஹார்முஸ் நீரிணை விவகாரம்; ஈரான் உறுதியான நிலைப்பாடு!

ஹார்முஸ் நீரிணை விவகாரம்; ஈரான் உறுதியான நிலைப்பாடு!

2026-10-21
திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்! 

திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்! 

2026-10-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: