ஐரோப்பாவை அடைய முயன்ற சுமார் 200 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு காம்பியா கடற்கரையில் கவிழ்ந்ததில் குறைந்தது ஏழு பேர் இறந்துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வடக்குக் கரைப் பகுதியில் உள்ள ஜினாக் கிராமத்திற்கு அருகே புதன்கிழமை (01) நள்ளிரவு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பின்னர் அது கரையில் தரையிறங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக காம்பிய பாதுகாப்பு அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுவரை குறைந்தது 90 பேர் மீட்கப்பட்டுள்ளனர், ஏனையவர்களை தேடும் பணிகள் தீவிரவப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் கப்பல் ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் ஆப்பிரிக்க குடியேறிகளுக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் மீது ஆபத்தான பயணம் பெருகிய முறையில் பொதுவான பாதையாக மாறியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் சுமார் 47,000 பேர் கேனரி தீவுகளை அடைந்தனர்.
மேலும் 9,000க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் முயற்சியில் இறந்ததாக ஸ்பானிஷ் அரசு சாரா அமைப்பான காமினாண்டோ ஃபிரான்டெராஸ் கூறியுள்ளது.
















