மட்டக்களப்பில் கடந்த 12 மணித்தியாலங்களில் மூன்று பேர் தவறான முஇடவெடுத்து உயிரை மைத்துக்கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு அரசடியில் உள்ள வர்த்தக கடைத்தொகுதிக்கு முன்பாகவே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர் அக்கரைப்பற்று பகுதியைசேர்ந்த 21 வயதுடைய முகுந்தன் சந்தோஸ் என்னும் இளைஞன் என பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
குறித்த இளைஞன் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தாகவும் அங்கிருந்து அக்கரைப்பற்றுக்கு செல்லவிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு 11.00 மணி வரையில் தங்களுடன் தொடர்பில் இருந்தாக உயிரிழந்தவரின் தந்தை பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரும் மட்டக்களப்பு தடயவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடி வைத்தியசாலை உள்வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (01) இரவு -700 மணியளவில் 22 வயதுடைய யுவதி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்து கொண்டுள்ள நிலையில் அதே பொலிஸ் பிரிவிலுள்ள மயிலம்பாவெளி பிரதேசத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான 22 வயதுடைய ஒருவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த 3 மாதங்களாக ஒரு தொழிலும் இல்லாது வந்த நிலையில் மது அருந்துவதற்கு மனைவியிடம் ஆயிரம் ரூபா பணம் கோரியதாகவும் அவரிடம் குழந்தைக்கு பால் வாங்க 200 ரூபா மட்டும் இருந்துள்ளதாகவும் இந்த நிலையில் சம்பவ தினமான நேற்று குறித்த நபர் 3 முறை கிணற்றில் வீழ்ந்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் மனைவி குழந்தையுடன் உறவினர் வீட்டுக்கு சென்ற நிலையில் தாயாருக்கு தெரிவித்து விட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரு சம்பவ இடத்துக்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
இது தொடர்பாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை நேற்று இரவு 7 மணியில் இருந்து இன்று அதிகாலை 6.00 மணி வரை மாவட்டத்தில் 3 பேர் உயிரை மாய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















