ஒன்றுபட்ட பிளவுபடாத நாட்டுக்குள் நிலையான தீர்வை வென்றெடுக்க அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.
பங்காளி கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து விசேட சந்திப்பு கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.
அதனை தெளிவுபடுத்தும் விதமாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பிற்குள் ஒரு சிலர் பிளவுகளை ஏற்படுத்த காத்திருக்கும் நிலையில் தமது ஒற்றுமையை உறுதி செய்ய சம்பந்தப்பட்டவர்களின் கலந்துரையாடல் இடம்பெறும் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.
தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வை அரசியமைப்பின் ஊடக பெற்றுக்கொள்வதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மிகப்பிரதான குறிக்கோள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகவே மக்கள் மத்தியில் இருக்கும் தெளிவை எவரும் குழப்பக் கூடாது என்றும் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.