வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பின் பேரில் 4 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லா இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இவ்வாறு வருகை தந்துள்ள அவர், இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் ஆளுந்தரப்பு அமைச்சர்கள் சிலருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இன்று பிற்பகல் ஐந்து மணிக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பிடனும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களாக எம்.எ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களையும் சந்தித்து, அவர் கலந்துரையாடவுள்ளார்.